×

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.

இந்நிலையில் மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அரிக்கியில்;

” விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது.அன்றைய தினம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.

The post சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sivaganga ,Medu Panther Memorial ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...